• Home
  • செய்திகள்
  • இதுவரை இன்று – 7 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இதுவரை இன்று – 7 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

செப்.5ல் நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது – தேசிய தேர்வு முகமை. Trending News Today

தமிழகத்தில் மேலும் 3,367 பேருக்கு கொரோனா தொற்று : தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்பு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் – மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின் எல்.முருகன் பேட்டி.

அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும் இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

மதுரை எய்ம்ஸ் : அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம் – தமிழக அரசு.

மத்திய அமைச்சர்கள் 12 பேரின் ராஜினாமாவை ஏற்று கொண்டார் இந்திய குடியரசுத்தலைவர்.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட வாய்ப்பு  என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழமுடியவில்லை : நடிகர் கமல்ஹாசன்.

நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை : 5, 10 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளை (08.07.2021) பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது என  மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

ஜெர்மனி கோலோன் பல்கலை.யில் அமைந்துள்ள  தமிழ்த்துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி : தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க நிதியுதவி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க கோரி மனு.

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார். Trending News Today

இந்தியன் – 2 பட விவகாரம் : இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

தாராபுரம் தொகுதி :கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற கயல்விழி செல்வராஜ் மாநில அமைச்சர்.
தோல்வியடைந்த எல்.முருகன் மத்திய அமைச்சர்.

பாலிவுட் நட்சத்திரம் திலீப் குமார் (98) மறைவு : பாகிஸ்தான் ரசிகர்கள் பெஷாவர் நகரில் உள்ள அவரது மூதாதையர் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் & கல்வியியல் பணிகள் கழக தலைவராக கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் குறித்த செய்தி குறிப்பில் பாஜக தலைவர் எல்.முருகன் குறித்த தகவலில் ‘கொங்குநாடு – தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Related posts

இதுவரை இன்று – 15 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

மேகேதாட்டு அணை.. கடிதம் மட்டும் அனுப்பினால் போதாது |பழனிசாமி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க TTV தினகரன் கோரிக்கை

Admin

2021 Tamilnadu +12 State Board Result.. இன்று காலை 11:00 மணிக்கு வெளியீடு.. தெரிந்துகொள்வது எப்படி?

Admin

Leave a Comment