• Home
  • செய்திகள்
  • இன்று பூமியை தாக்கும் சூரிய புயல் ( Solar Storm ) | யாருக்கெல்லாம் பாதிப்பு இருக்கும்?
அறிவியல் செய்திகள்

இன்று பூமியை தாக்கும் சூரிய புயல் ( Solar Storm ) | யாருக்கெல்லாம் பாதிப்பு இருக்கும்?

அதிவேக சூரிய புயல் ( Solar Storm ) இன்று ஒரு மணி நேரத்திற்கு 1.6 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, இன்று பூமியின் காந்தப்புலத்தில் சூரிய புயல் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது. இதனால் பூமியில் மின்காந்த அலை மூலம் செயல்படக்கூடிய தகவல் தொடர்பு பொருட்களில் பாதிப்பு ஏற்படும் எனவும் நாசா கூறியுள்ளது.

இந்த சூரிய புயலானது, சூரியனின் பூமத்திய ரேகையில் இருந்து ஒரு வினாடிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் வெளிவந்ததை ஜூலை 3 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாக spaceweather.com என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் முழுஅளவிலான புவிகாந்த புயல்கள் சாத்தியமில்லை என்றாலும், குறைந்த அளவிலான புவிகாந்த புயல்களால் உயர் அட்சரேகை கதிர்கள் (high-altitude auroras) ஏற்படலாம்.

பூமியின் வெளிப்புறத்தில் உள்ள செயற்கைகோள்கள் இந்த சூரிய புயலால் பாதிக்கப்படும். இந்த சூரிய புயலால் GPS கருவிகள், Mobile phone signal, Satellite TV ஆகியவற்றில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

Solar Strom to hit Earth’s Magnetic field. Source: NASA

இந்த சூரிய புயல் தாக்கும் பொழுது சுமார் ஒரு மணி நேரத்திற்கு உயர் அதிர்வெண் வானொலி தொடர்புகள் துண்டிக்கப்படும் என்று அமெரிக்காவின் Space Weather Prediction Centre நிறுவனம் கூறுகிறது. இந்த சூரிய புயல் ‘X1’ வகையை சேர்ந்ததாகும். இதில் ‘X’ என்பது சூரியபுயலின் வகையையும், 1 என்பது அதன் சக்தியையும்(Strength) குறிப்பதாகும்.

சூரியனின் அதீத ஆற்றல் மூலம் மிகப்பெரும் வெடிப்பு ஏற்பட்டு சூரியனிலிருந்து ஆற்றல், ஒளி மற்றும் அதிவேக துகள்கள் வருவதையே சூரிய புயல்கள் என்கிறோம். சூரியபுயல்களில் மிகப்பெரியது ‘X’ வகையை சேர்ந்ததாகும், மிக சிறியது ‘A’ வகையையும் அதை தொடர்ந்து B,C,M வகை புயல்களாகும்.

Leave a Comment