• Home
  • அரசியல்
  • அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம் – சீனாவை எச்சரித்த மோடி
அரசியல் இந்தியா உலகம் செய்திகள்

அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்போம் – சீனாவை எச்சரித்த மோடி

இந்தியா அமைதியை விரும்புகிறது; ஆனால் அதே நேரத்தில் எல்லையில் அத்துமீறி நடந்து கொண்டால் அதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் வழங்கும் என பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவை எச்சரித்துள்ளார்.

இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், ஐந்து வாரங்களாக, இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட நம் நாட்டு வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. “எல்லையில் உயிர்நீத்த வீரர்களின் தியாகம் ஒரு நாளும் வீன் போகாது. ஒற்றுமையும், நம் நாட்டின் இறையாண்மையுமே இந்தியாவிற்கு முக்கியமாகும். இந்தியா அமைதியை விரும்புகிறது; அதே நேரத்தில் அதன் அமைதியை சீர்குலைக்க அத்துமீறினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும்” என்று தனது அறிக்கையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment