• Home
  • அறிவியல்
  • பள்ளி விடுமுறையில் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பொழுதுபோக்குகள்
அறிவியல் ஆரோக்கியம் செய்திகள்

பள்ளி விடுமுறையில் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பொழுதுபோக்குகள்

hobbies for children

எப்போதும் செல்போன் மற்றும் டிவியில் மூழ்கி இருக்கும் நம் குழந்தைகளை, அதில் இருந்து விடுபட செய்வது பெற்றோர்களுக்கு பெரும் சிரமமாய் இருக்கும். அதிலும் இந்த விடுமுறை நாட்களில் குழந்தைகளிடம் இருந்து தங்கள் செல்போனை பாதுகாப்பதே பெற்றோர்களுக்கு பெரும் வேலையாய் இருக்கும். குழந்தைகள் எப்போதும் ஒரு புது விளையாட்டையோ, பொழுதுபோக்கையோ கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுடைய ஆர்வத்திற்கு ஏற்றவாறு பெற்றோர்கள் ஒரு புது பொழுதுபோக்கு அம்சத்தை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். குழந்தை நல நிபுணர்கள் கூறும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பொழுதுபோக்குகள் என்னவென்று பார்க்கலாம்.

1. வீட்டுத்தோட்டம் அமைத்தல்:

வாழ்வியல் முறையான விவசாயத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர விரும்பும் பெற்றோர்கள், வீட்டுலயே சிறிய அளவில் கீரை, காய்கறி பூச்செடிகள் வளர்க்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம். சமையல் கழிவுகளை எப்படி உரமாக மாற்றுவது, ஒரு விதையில் இருந்து எப்படி செடி உருவாகிறது என்பது போன்ற வாழ்வியல் முறை விவசாய பாடங்களை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கலாம்.

2. சமையல் கலை:

விவசாயம் கற்றுக்கொண்ட பிறகு, அந்த விவசாயத்தில் விளைந்த காய்கறி வகைகளை சுவையாகவும் உடலிற்கு சத்தாகவும் எப்படி சமைப்பது என்பதை குழந்தைகளுக்கு கற்றுத்தரலாம். குறைந்தபட்சம் சமையலுக்கு தேவையான காய்கறிகளை கழுவி வைப்பது, அவர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை அவர்களாகவே கழுவி வைப்பது போன்றவற்றை பயிற்றுவிக்கலாம்.

3. கைவினைப் பொருட்கள் செய்தல்:

குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வரலாகும் விதத்தில் வீட்டில் உள்ள பழைய பொருட்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சியளிக்கலாம். சிறுவர்கள் செய்யும் கைவினைப்பொருட்களை சமூகவலைத்தளத்தில் சந்தைப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

4. செல்லப்பிராணிகளை வளர்த்தல்:

சக உயரினங்களிடம் அன்பு செலுத்தும் பழக்கத்தை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். செல்லப்பிராணிகளை அக்கறையுடன் வளர்க்கும் குழந்தைகள் பொறுமையுடனும், பொறுப்புணர்வுடனும், பிறரிடத்தில் அன்புடனும் வளருவார்கள். வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்க முடியாதவர்கள், பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தொட்டி அமைத்து தரலாம். கோடை காலத்தில் தண்ணீர் தேடும் பறவைகளுக்கு அது உதவியாக இருக்கும்.

5. ஓவியம் வரைதல்:

குழந்தைகளின் கண்களுக்கு புது புது வண்ணங்களை அறிமுகம் செய்யும் வகையிலும், அவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் வகையிலும் ஓவியம் வரைந்து அதற்கு வண்ணங்கள் தீட்டும் பயிற்சி அளிக்கலாம்.

6. புத்தகம் வாசித்தல்:

உலகின் தலைசிறந்த மனிதர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் புத்தகம் படிப்பதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகின்றனர். தங்களை மேன்மைப்படுத்தும் புத்தகங்களில் ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படித்துவிட வேண்டும் என்று வாழ்கின்றனர். நம் குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவும் புத்தக வாசிப்பு பயிற்சியை சிறு வயது முதலே நாம் துவங்கலாம். முதலில் படங்கள் மூலம் கதை சொல்லும் புத்தகத்தில் ஆரம்பித்து, பின் எழுத்துக்கூட்டி படிக்கும் பயிற்சியை தொடரலாம். குழந்தைகளின் வாழ்க்கையை செழுமையாக்க ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருப்பது அவசியமாகும்.

7. கதை சொல்லுதல்:

புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்காத குழந்தைகளுக்கும், அல்லது புத்தகங்கள் படிக்க விருப்பம் இல்லாத குழந்தைகளுக்கும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தாங்கள் அந்த புத்தகத்தை படித்து கதை சொல்லலாம். நீங்கள் சொல்லும் கதைகளில் இருந்து கேள்விகள் கேட்டால் குழந்தைகளில் நினைவாற்றலும் வளரும்.

8. சுற்றுலா:

சிறுவர்களை அருகில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு அழைத்து செல்லலாம். மேலும் அவர்களுக்கு உலக அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக அருகில் உள்ள அருங்காட்சியகங்கள், விவசாய நிலங்கள், தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் அழைத்து சென்று விளக்கலாம்.

9. வீட்டு வேலைகள்:

வீட்டில் நாம் செய்யும் அன்றாட வீடு வேலைகளில் நம் குழந்தைகளை ஈடுபட செய்யலாம். பெண் பிள்ளைகள் தான் வீடு வேலைகள் செய்யவேண்டும் என்ற பாகுபாட்டை சிறுவயதில் இருந்ததே வளர்த்துக்கொள்ளாமல், இது நம் வீடு நாம் தான் வேலைசெய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு குழந்தைகளிடம் வளர்த்த வேண்டும்.

10. நீச்சல் பயிற்சி:

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். நம் வாழ்வில் ஒரு முறையாவது நாம் நீர்நிலைகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை வரலாம், அப்பொழுது நமக்கு நிச்சயம் நீச்சல் தெரிந்திருப்பது அவசியமாகும். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள நீச்சல் பயிற்சியும் உதவும்.

உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் எவ்வாறு விடுமுறையை பயனுள்ளதாக கழிப்பீர்கள், குழந்தைகளுக்கு என்னென்னெ புதிய விஷயங்களை கற்றுகொடுப்பீர்கள் என்று Comment-ல் தெரிவியுங்கள். குழந்தைகள் வைத்துள்ள தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த தகவலை பகிருங்கள்.

Related posts

குளிர்காலத்தில் குழந்தைகளை எப்படி வீட்டிற்குள்ளேயே சமாளிப்பது ?

Sathya Anandhan

Leave a Comment