• Home
  • செய்திகள்
  • “Swiggy, Zomato, Uber eats” மூலம் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம்

“Swiggy, Zomato, Uber eats” மூலம் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொடிய வைரஸான கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரண்டங்கு உத்தரவை மத்திய அரசு அணைத்து மாநிலங்களுக்கும் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவால் அனைவரும் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தி உளள்து. பால், காய்கறிகள், மளிகை முதலான அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே இருக்கும் மற்ற கடைகள் செயல்படாது என அந்த அறிவிப்பில் உள்ளது.

வீட்டில் சமைக்க முடியாமல், உணவுக்காக வெளியில் உள்ள ஹோட்டலை நம்பி இருக்கும் பல பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இவர்களுக்கு உணவு கிடைக்கும் நோக்கத்தில் “Swiggy, Zomato, Uber eats” போன்ற நிறுவனங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களுக்கு உணவும் எடுத்துச் சென்று வழங்க சிறப்பினமாக அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தகைய பணியில் ஈடுபடும் நபர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளவும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களின் உடல்நிலையை தினந்தோறும் பரிசோதித்து பின்னர் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

“Swiggy, Zomato, Uber eats” போன்ற நிறுவனங்களின் மூலம்

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும்

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும்

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச்சென்று வழங்க சிறப்பினமாக அனுமதிக்கப்படுகிறது.

என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் செயல்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Comment