• Home
  • செய்திகள்
  • இதுவரை இன்று – 14 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
அரசியல் இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

இதுவரை இன்று – 14 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த பெண்ணுக்கு, ஒன்றரை வருடத்துக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுள்ளது. Trending News Today

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேருக்கு கொரோனா உறுதி : 48 பேர் சிகிச்சை பலனின்றி மரணம்.

நீட் தேர்வு நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நிலையில் இணையதளம் முடங்கியது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்தார் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்.

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின் உயிர் காக்கும் மருந்திற்கு GST வரி விலக்கு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம்.

ஜூலை 16ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிஷா  உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் நிலவரம் குறித்து காணொளி காட்சி மூலம்  ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.

டெல்லியில் பிரதமர் மோடி உடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திப்பு.

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் என நீதிபதிகள் கருத்து – பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

நீட் பாதிப்பு கண்டறிய  தமிழக அரசு மக்கள் கருத்து  கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் ? – பாஜக கரு.நாகராஜனுக்கு நீதிபதி கேள்வி.

அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணிய முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

இணையதள பதிவு வழியே தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் பணி வரும் 17ம் தேதி முதல்  நிறுத்தபடும் – தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவிப்பு.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தவுடன், உதவி செவிலியர் பயிற்சி முடித்தவர்களது பணி நியமனம் பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் – அமைச்சர்  மா.சுப்பிரமணியன்.

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு. சமூகநீதிக்கு பாடுபடுவதாக கூறும் நடிகர்கள் இதுபோன்ற வரி ஏய்ப்பு  செய்வது ஏற்றுக் கொள்ள இயலாது என  உயர்நீதிமன்றம் கண்டனம். நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் .ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது – நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஹெச்.ராஜா மனு.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில்,போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர் ஹபீப் முகம்மதுவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

சென்னை அடுத்த எண்ணூரில் கேஸ் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்க திட்டம் –  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

வெள்ளக்கோவில் அருகே பட்டியல் இன இளைஞர் சசிகுமார் மரண வழக்கை மீண்டும் விசாரிக்க திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் காலமானார்.

Related posts

2021 Tamilnadu +12 State Board Result.. இன்று காலை 11:00 மணிக்கு வெளியீடு.. தெரிந்துகொள்வது எப்படி?

Admin

திருநெல்வேலி : கொரோனா தடுப்பு நடவடிக்கை – வீட்டில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்

Admin

இதுவரை இன்று – 8 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

Leave a Comment