ஆரோக்கியம் உலகம் செய்திகள்

பூசணிக்காயை வைத்து சுவையாக என்ன சமைக்கலாம் …

ஹாலோவீன் பூசணிக்காயை எதற்கு பயன்படுத்தலாம் ?

ஹாலோவீன் பூசணிக்காய் ‘ஜாக் ஓ’லான்டர்ன்'( Jack O’ Lantern) குளிர்கால ஸ்குவாஷ் வகை, இது நன்கு அறியப்பட்ட அலங்கார பூசணிக்காய்களின் இனமாகும். இது பெரும்பாலும் ஹாலோவீனுக்குப் பயன்படுத்தப்படுகிறது. செடிகளில் குறுகிய கொடிகள் இருக்கும். பூசணிக்காயை பழுக்க வைக்கும் போது, பழங்கள் பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறமாக மாறத் தொடங்கும். அமெரிக்காவில் இன்னும் பருவகாலமாக சாப்பிடும் ஒரே உணவுகளில் பூசணிக்காயும் ஒன்றாகும் . அப்படி சாப்பிட உதவும் பூசணிக்காய்களை திருஷ்டிக்கும், ரோட்டில் உடைக்கவும் பயன்படுத்தாமல் உணவுக்காக பயன்படுத்தலாம் . pumpkin recipes

ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் ஹாலோவீன் பூசணிக்காயானா (ஜாக் ஓ’லான்டர்ன்) வகை பூசணிக்காயை வளர்க்க பயன்படுத்தப்படுகின்றனர். How to cook pumpkin

The spookiest thing about Halloween? The waste. - Marketplace
Jayalalithaa in hospital: AIADMK members break pumpkins to ward off evil  eye | News - Times of India Videos

ஹாலோவீன் முடிந்தவுடன், உங்கள் வீட்டில்பூசணிக்காயை சுவையான உணவாக சமைத்து சாப்பிடலாம், இது உங்கள் உணவுக் கழிவுகளைக் குறைக்க உதவும். பூசணிக்காயைப் பயன்படுத்துவதற்கு முன், பெரும்பாலான ஹாலோவீன் பூசணிக்காயை இயற்கை முறையில் வளர்க்காததால், பூச்சிக்கொல்லிகளை அகற்ற அதை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். ஹாலோவீன் பூசணிக்காயை எவ்வாறு பயன்படுத்துவது என்று தேடுகிறீர்களா? பூசணிக்காயை குப்பையில் போடுவதை விட சுவையாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

1.வறுத்த பூசணி விதைகள்(Roasted pumpkin seeds):

உணவு வீணாவதைக் குறைப்பதற்கான முதல் படி உங்கள் பூசணிக்காயை வெட்டியதும் பூசணி விதைகளை ஒரு கரண்டியால் எடுத்து, சிறிது ஆலிவ் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து,வருத்தால்(fry ) ஆரோக்கியமான மற்றும் சுவையான சிற்றுண்டியை உருவாக்கலாம்.

2.பூசணிக்காய் கூழ் செய்யவும்(Make pumpkin puree):

உங்கள் பூசணிக்காய் கெட்டுப்போவதற்கு முன்பு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். முழு பூசணிக்காயை பல மாதங்கள் சேமிக்க முடியும், ஆனால் அதை வெட்டியதுடன் , அவை சில நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். பூசணி விதைகளை நீக்கியதும் அதனை அரைத்து பூசணிக்காய் ப்யூரி செய்ய வேண்டும் .

3.ஊறுகாய் பூசணி தோல்கள்(Pickled pumpkin skins):


இது சற்று வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் பூசணிக்காய் ஊறுகாய் உண்மையில் சுவையாக இருக்கும். பூசணிக்காய் கெட்டுப் போவதற்கு முன்பு அல்லது ஃப்ரீசரில் வைத்து நிறைய பூசணிக்காயைப் பாதுகாக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

4.பூசணிகாய் பை(Pumpkin Pie):

பெரும்பாலான மக்கள் பூசணிக்காயை சாப்பிடுவதைப் பற்றி நினைக்கும் போது, அவர்கள் பொதுவாக கிளாசிக் அமெரிக்கன் பூசணிக்காய் பை செய்து சாப்பிடுகிறார்கள் . ஏனெனில் பூசணிக்காய் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

5.பூசணி மசாலா லேட் (pumpkin spice latte):

ஜாக்-ஓ-லாந்தரில் இருந்து பூசணி ப்யூரியைப் பயன்படுத்தி உங்கள் சொந்த பூசணி மசாலா லட்டுகளை செய்யலாம் . வீட்டிலேயேஇந்த எளிய பூசணி மசாலா லட்டுகளை செய்து கொள்ளாம்.

6.பூசணி மிளகாய்(Pumpkin Chili):

பூசணி மிளகாய் குளிர்ந்த இலை உதிர் நாளில் சூடுபடுத்த ஒரு சுவையான மற்றும் பருவகால உணவாகும். வான்கோழி மற்றும் கருப்பு பீன்ஸ் செய்முறையுடன் கூடிய இந்த பூசணி மிளகாய் அற்புதமானதாக இருக்கும்.

7.பூசணிகாய் ரொட்டி அல்லது மஃபின்கள்(Pumpkin Bread or Muffins):

வீட்டில் தயாரிக்கப்பட்ட பூசணிக்காய் ரொட்டி அல்லது மஃபின்கள் எந்தவொரு கெமிக்கலலும் சேர்க்காமலும் வெற்றிபெறுவது உறுதி, குறிப்பாக நீங்கள் ஒரு சில சாக்லேட்டையும் சேர்த்து செய்யலாம்.

8.விலங்குகளுடன் பூசணிக்காயைப் பகிர்ந்து கொள்ளுங்கள்(Share pumpkins with animals):

நீங்கள் பூசணிக்காயை விரும்பாவிட்டால் உங்களுடைய செல்லப்பிராணியுடன் பகிர்ந்து கொள்ளலாம் . கோழிகள், பன்றிகள் மற்றும் நாய்கள் போன்ற பல விலங்குகள் பூசணி விதைகளை உணவாக உட்கொள்ளும். உங்கள் செல்லப்பிராணியின் உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் உங்கள் கால்நடை மருத்துவரிடம் தெரிந்துகொள்ளுங்கள்.

9.பூசணி வெண்ணெய்(Pumpkin Butter):

பூசணி வெண்ணெய் உங்கள் அதிகப்படியான பூசணிக்காயைப் பயன்படுத்த ஒரு சுவையான வழியாகும்.பூசணி வெண்ணெய் விரைவாக தயாரிக்கப்படுகிறது , பின்னர் பயன்படுத்த உறைந்த நிலையில் சாப்பிடலாம்.

10. ரவியோலி செய்யலாம்(Make ravioli ):

ஸ்குவாஷ் ரவியோலி செய்முறையிலும் நீங்கள் பட்டர்நட் ஸ்குவாஷை பூசணிக்காயுடன் மாற்றலாம்.

11.பூசணி காபி கேக்(Pumpkin Coffee Cake):

காலை உணவைப் பற்றி பேசுகையில், ஆப்பிள் மற்றும் பூசணிக்காயுடன் கூடிய, இந்த இலையுதிர்கால அறுவடை காபி கேக் தான் மிகவும் சிறந்தது .

ஹாலோவீன் பூசணிக்காய்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாத உணவுக் கழிவுகளில் ஒன்றாகும் . அவற்றை விடுமுறை அலங்காரமாக கருதாமல், சத்தான, சுவையான, வரலாறு நிறைந்த உணவாகப் பயன்படுத்துங்கள்.

Related posts

ஹாலோவீன்… அப்படி என்றால் என்ன? ஏன் கொண்டாடுகிறார்கள் ??

Sathya Anandhan

Leave a Comment