• Home
  • செய்திகள்
  • சுருக்கு மடி வலை.. போராடும் மீனவர்கள்.. தீர்வு காண தமிழக அரசுக்கு TTV தினகரன் கோரிக்கை!
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

சுருக்கு மடி வலை.. போராடும் மீனவர்கள்.. தீர்வு காண தமிழக அரசுக்கு TTV தினகரன் கோரிக்கை!

TTV Dhinakaran

சுருக்கு மடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுருக்கு மடி வலை என்றால் என்ன? சுருக்கு மடி வலையில் மீன் பிடிக்கும் மீனவர்கள்

கடலில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சுருக்கு மடி வலையில் சிக்கிக்கொள்வதால் கடந்த 2000 ஆம் ஆண்டு சுருக்கு மடி வலையில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. மீனவர் சங்கங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சுருக்கு மடி வலை மற்றும் படகுகளில் முதலீடு செய்த மீனவர்கள், அரசின் இந்த தடை உத்தரவால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து வரும் சூழ்நிலையில், கடந்த 17-ம் தேதி முதல் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் போராடி வருகின்றனர்.

மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில்

சுருக்கு மடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்காக மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது சரியானதல்ல. மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நம்முடைய மீனவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சுருக்குமடி வலை பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று TTV.தினகரன் அறிக்கை விடுத்துள்ளார்.

Related posts

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்; தி.மு.க விற்கு TTV தினகரன் எச்சரிக்கை

Admin

கேரளாவில் மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் அனுமதி அளிக்க வேண்டும்: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

Admin

சசிகலா தலைமையில் அதிமுக : பாஜக வகுக்கும் வியூகம்

Admin

Leave a Comment