• Home
  • அரசியல்
  • 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு
அரசியல்

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்த இரண்டு மாதத்திற்குள் நடைபெறும் என்று சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவித்தது. கொரோனா பரவல் அதிகமாகும் இச்சூழலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்றே இந்த அறிவிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அமமுக தொண்டர்கள் #மாணவர்நலனில்_அமமுக என்ற hashtag மூலம் Twitterல் இந்திய அளவில் Trending செய்தனர்.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் இன்று காலை தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.

தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அளித்தது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

நிலுவையில் உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சசிகலா தலைமையில் அதிமுக : பாஜக வகுக்கும் வியூகம்

Admin

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்; தி.மு.க விற்கு TTV தினகரன் எச்சரிக்கை

Admin

‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Admin

Leave a Comment