• Home
  • அரசியல்
  • அம்பேத்கர் உருவப்படத்துடன் Hashtag வெளியிட்ட Twitter நிறுவனம் – Ambedkar Jayanti
அரசியல் இந்தியா செய்திகள்

அம்பேத்கர் உருவப்படத்துடன் Hashtag வெளியிட்ட Twitter நிறுவனம் – Ambedkar Jayanti

Ambedkar Jayanthi 2020

அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 129வது பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கரின் உருவப்படத்துடன் கூடிய Ambedkar Jayanti #JaiBhim என்ற hashtag -ஐ வெளியிட்டு Twitter நிறுவனம் மரியாதை செலுத்தி உள்ளது.


Twitter respected Dr.B.R.Ambedkar by introducing hashtag #AmbedkarJayanti #JaiBhim with Ambedkar picture

சிறுவயதில் சாதி தீண்டாமை கொடுமையினால் பாதிக்கப்பட்டு, பின்னநாளில் அந்த தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடி, சட்டம் படித்து பட்டம் பெற்று இந்திய அரசியல் சாசனத்தையே இயற்றும் அளவிற்கு தன கடின உழைப்பால் முன்னேறியவர் Dr.பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.

இந்திய மக்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று காந்தி அஞ்சினார்.

பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். இதுவே புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் (Reserved Constituency) ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.

பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 5,00,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள்.

சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment