• Home
  • இந்தியா
  • Toll Gate கட்டணம் வசூலிக்க கூடாது..துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடை – TTV தினகரன் அறிக்கை
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

Toll Gate கட்டணம் வசூலிக்க கூடாது..துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடை – TTV தினகரன் அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மார்ச் 31 வரையிலான ஊரடங்கு உத்தரவு இன்று மாலை ஆறு மணி முதல் தொடங்க இருப்பதால், சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் பயணமாகும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.


இவர்களது சொந்த வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளால் சுங்கச் சாவடிகளில் நீண்டநேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தலை இது அதிகமாக்கவே செய்யும் என்பதால் இன்று முழுவதும் சுங்கக் கட்டணமில்லாமல் வாகனங்கள் விரைவாக வெளியேற அனுமதிக்க வேண்டும்.


இந்த விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியிருப்பதை மனதில்கொண்டு உரிய உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து பிறப்பிக்க வேண்டும்.

மேலும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கவச ஆடைகளை குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம் பாராது பணிபுரிந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரின் சேவை மகத்தானது. மிகுந்த நன்றிக்குரியது. அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.


ஆனால், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருக்கிற கவச உடைகள் உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டிய தரத்தில் இல்லை என்று வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.


அரசு இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சரியான கவச உடைகளை வழங்குவதுடன் தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் யுகாதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட டிடிவி தினகரன், உலக மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Related posts

சுருக்கு மடி வலை.. போராடும் மீனவர்கள்.. தீர்வு காண தமிழக அரசுக்கு TTV தினகரன் கோரிக்கை!

Admin

உள்ளாட்சி தேர்தலில் அசத்திய டிடிவி.தினகரன்… உற்சாகத்தில் அமமுகவினர்!

Admin

சென்னை, செங்கல்பட்டு, கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு

Admin

Leave a Comment