• Home
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு – முதல்வர் அறிவிப்பு
செய்திகள் தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு – முதல்வர் அறிவிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை தமிழகத்தில் 144 தடையை அமல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை உத்தரவால் நாளை மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.

  • அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை கார்கள், ஆட்டோ ஆகியவை இயங்காது.
  • அத்தியாவசிய பொருட்டுக்களான பால் மற்றும் காய்கறிகள் மளிகை தவிர மற்ற எந்த கடைகளும் இயங்காது.
  • மக்களின் சேவைக்காக மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்கும்
  • தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் நாளை முதல் இயங்காது
  • விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் வசதிக்காக அம்மா உணவகங்கள்
  • செயல்படும்.
  • கர்ப்பிணிகள், முதியவர்கள் கண்டறிந்து உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சாலையோரம் வசிக்கும் மக்களின் நிலை பற்றி முதல்வர் அறிக்கையில் எதுவும் கூறவில்லை.

மேலும் 144 தடை உத்தரவு குறித்த விரிவான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும்.

Leave a Comment