• Home
  • தமிழ்நாடு
  • தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவும் அபாயம் – தமிழக அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் பீதி
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவும் அபாயம் – தமிழக அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் பீதி

நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவை இன்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்த அறிவிப்பில் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை கார், ஆட்டோ இயங்காது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பால் குழப்பம் அடைந்த மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்ப கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர்.

தமிழக அரசு போக்குவரத்துக்கு துறையின் நிர்வாக திறமையின்மையின் காரணமாகவும், தமிழக அரசின் அலட்சியத்தாலும் பொதுமக்கள் சுய தனிமைப்படுத்துதலை மறந்து தங்கள் ஊருக்கு பேருந்தை பிடிக்க ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர்.

கொரோன என்ற கொடிய நோய் பரவாமல் தடுக்க உலக அளவிலான மருத்துவர்கள் குறிப்பிடும் முக்கிய பாதுகாப்பான சுய தனிமைப்படுத்துதலை ஊக்குவிக்க வேண்டிய அரசே இப்படி மெத்தன போக்குடன் செயல்படுவதாக அங்கிருந்த மக்கள் குற்றம்சாட்டினர்.

இதையே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் வீட்டிற்குள் தனிமைப்பட்டிருந்த நிலையில் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து கைத்தட்டுங்கள் என்று பிரதமர் மோடி சொன்ன காரணத்திற்காக வீதியில் கைதட்டி ஆடி பாடி கொரோனா வைரஸ் பரவுவதை ஊக்கப்படுத்தினார்கள்.

உயிரை பணயம் வைத்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரம், மருத்துவம், காவல் துறையை சேர்ந்த பலர் தியாக உணர்வுடன் செயல்பட்டு வரும் வேலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அரசு இப்படி அலட்சியத்துடன் செயல்படுவது வேதனை அளிக்கிறது.

குறிப்பு: 144 தடை இருந்தபோதும் பால், காய்கறி மளிகை கடைகள் செயல்படும்.

Related posts

போலி இ-பாஸ் மூலம் கோவை வந்த 30 பேர்; ஆம்னி பஸ் பறிமுதல் | EPass

Admin

1 comment

Muthukumar March 24, 2020 at 12:26 am

உண்மை. இந்த அரசின் அலட்சியத்தால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

Reply

Leave a Comment