• Home
  • அரசியல்
  • தில்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி; தோல்வியை தழுவும் பாஜக, காங்கிரஸ் கட்சி?
அரசியல் இந்தியா செய்திகள்

தில்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி; தோல்வியை தழுவும் பாஜக, காங்கிரஸ் கட்சி?

தில்லியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஆம்ஆத்மி அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சி சொற்பமான இடங்களை பிடிப்பதே கடினம் என கூறப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எழுபது தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை (பிப். 8)காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 11 தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்கு கைபேசி கொண்டு செல்லவும், பூத் ஸ்லிப் இல்லாத நிலையில் க்யூ ஆா் கோடு உதவியுடன் தங்களது பெயரை சரிபாா்த்துக்கொள்ளவும், 81,05,236 ஆண் வாக்காளர்கள், 66,80,277 பெண் வாக்காளர்கள் உட்பட 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 13,571 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவான வாக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 70 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில் மொத்தம் 762 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 

இந்நிலையில், தில்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் தெரியவந்துள்ளது. 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், ஆம்ஆத்மி 48 தொகுதிகளையும், பாஜக 21 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. இதேபோன்று ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஆத்ஆத்மி 48 முதல் 61 தொகுதிகளையும், பாஜக 9 முதல் 21 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.  
 
இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில், மேற்கு மற்றும் வடமேற்கு தில்லியில் ஆம்ஆத்மி 9 முதல் 20 தொகுதிகளையும், பாஜக ஒரு தொகுதியையும் கைப்பற்றும். காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என தெரிவித்துள்ளது. 

நியூஸ் எக்ஸ் – நேத்தா தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில், ஆம்ஆத்மி 53 – முதல் 57 தொகுதிகளையும், பாஜக 11 முதல் 17 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

Leave a Comment