• Home
  • அரசியல்
  • 4 நாட்கள் பயணமாக டெல்லி வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராகுல் காந்தியை சந்தித்தார்
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

4 நாட்கள் பயணமாக டெல்லி வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராகுல் காந்தியை சந்தித்தார்

டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாட்கள் பயணமாக டெல்லி வருகை தந்துள்ளார். டெல்லியில் மகிந்த ராஜபக்சேவை மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றார். இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்ற கோத்தபாய ராஜ்பக்சே முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகை தந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை கோத்தபாய ராஜபக்சே சந்தித்து பேசினார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே, மகிந்த ராஜபக்சேவை வரவேற்றார். வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மன்மோகன்சிங், ராகுலுடன் மகிந்த ராஜபக்சே சந்திப்பு

டெல்லி வருகை தந்த மகிந்த ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் ராஜ பக்சே தலைமையிலான ஆட்சியில் ஈழ தமிழர்களுக்கு எதிராக நடந்த இன படுகொலையின் போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் – முகிலனின் மனைவி பேட்டி

admin

ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி

admin

ஸ்டாலினுடன் பாரிவேந்தர் சந்திப்பு

admin

Leave a Comment