• Home
  • செய்திகள்
  • ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கண்பார்வை | கண்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகள் எது?
ஆரோக்கியம் செய்திகள்

ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கண்பார்வை | கண்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகள் எது?

கொரோன ஊரடங்கு காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தொடங்கின. நம் நாட்டில் பெரும்பாலான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த முறை புதிதாக இருந்ததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக அதிக நேரங்கள் கைபேசி அல்லது கணினி மூலமாக பயிலும் மாணவர்களின் கண்கள் பாதிப்படைகிறது. நம் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகளை காண்போம். Best foods for kids eyesight

வைட்டமின் A ( Vitamin A ):
கண்பார்வைக்கு ஏற்ற மிக முக்கிய உணவு வைட்டமின் எ. நம் உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் சீதமென்சவ்வு (mucous membranes) பாதுகாப்புக்கும் முக்கிய பங்காற்றுகிறது. வைட்டமின் எ குறைபாடு கண்பார்வையை

வைட்டமின் A நிறைத்த உணவுகள் | Vitamin A rich foods:

  • பாலாடைக்கட்டி
  • முட்டை
  • ஈரல்
  • பால்
  • கீரைகள்
  • சர்க்கரை வள்ளி கிழங்கு
  • மிளகு
  • பீட்டா கெரோட்டின் நிறைந்த பப்பாளி, கேரட், மற்றும் மாங்காய் போன்ற பழங்கள்.

மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, திராட்சைப்பழம், பச்சை மிளகு, தக்காளி. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளான பாதாம், வேர்க்கடலை, சோள எண்ணெய், சூரியகாந்தி விதைகள் ஆகியவைகளும் மிகுந்த பலனளிக்கும்.

கண்களில் ஏற்படும் வறட்சி:
மாணவர்கள் அதிகநேரம் திரையை பார்ப்பதால் கண்களில் நீர் வற்றி வறட்சி ஏற்படும், இதனை சரிப்படுத்த ஒமேகா 3 (Omega 3) கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயன்படுகிறது. நெத்திலி, முரண் கெண்டை, கானாங்கெளுத்தி, காலா மீன் (Salmon), மத்தி மற்றும் சூரை ஆகிய மீன் வகைகளில் ஒமேகா 3 அமிலம் நிறைந்துள்ளது. மீன்கள் சாப்பிட விரும்பாத நபர்கள் ஆளி விதைகள் (Flax seeds), டோஃபூ (tofu), வால்நட் மற்றும் முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம்.

நம் உணவுகளில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகும். கேக், ஜாம், இனிப்பு பானங்கள், மிட்டாய்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரை கண்கள் பாதிக்க காரணமாகும்.

மேலும் நல்ல உணவு பழக்கங்கள், கண்களுக்கு ஏற்ற பயிற்சிகளும் நம் குழந்தைகளின் கண்களை பாதுகாக்கும்.

Related posts

“வெளியில் வரவேண்டாம்” – கை எடுத்து கும்பிட்ட தெலுங்கானா போலீசார்

Admin

உயிரைக்கொல்லும் Insomnia… தூக்கமின்மை நோய்க்கு தீர்வுதான் என்ன ?

Sathya Anandhan

கேரளாவில் மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் அனுமதி அளிக்க வேண்டும்: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

Admin

Leave a Comment