• Home
  • செய்திகள்
  • வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது – TTV தினகரன்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது – TTV தினகரன்

TTV Dhinakaran

தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்..

தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.

இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது கண்டனத்தை Twitter-ல் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க:
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஆக்சிஜன் வழங்கியது ஏன்?
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்

Related posts

சசிகலா நிகழ்ச்சிகளில், அமமுக ஏன் பங்குபெறக்கூடாது? – டிடிவி.தினகரன் பளீச்..

Admin

திருப்பூர் வாசிகள் இனி வீட்டில் இருந்தபடியே இ-பாஸ் வாங்கலாம்

Admin

தஞ்சாவூர் – கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்!

Admin

Leave a Comment