• Home
  • தமிழ்நாடு
  • தஞ்சாவூர் – கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்!
செய்திகள் தஞ்சாவூர் தமிழ்நாடு

தஞ்சாவூர் – கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது பம்பப்படையூர் தென்னூர். இங்குள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36) சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். சளி, காய்ச்சல் இருந்ததால், கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கொரோனா அறிகுறியுடன் இருந்த ராஜ்குமார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த மாதிரி எடுப்பதற்கு முன் அவர் ஓடி விட்டதாக கூறப்படுகிறது. எனவே ராஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதை கேள்விப்பட்ட தஞ்சாவூர் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் என்ஜினியர் குணமாகிவிட்டார். மேலும் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர், அயர்லாந்தில் இருந்து வந்த மாணவர், தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பேர், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை இன்று – 14 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Admin

தளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்

Admin

Leave a Comment