• Home
  • அரசியல்
  • அமமுக தொண்டர்களின் மக்கள் சேவை – உணவு முதல் வீடு வரை தானமாக கொடுத்து நெகிழ்ச்சி
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

அமமுக தொண்டர்களின் மக்கள் சேவை – உணவு முதல் வீடு வரை தானமாக கொடுத்து நெகிழ்ச்சி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நம் நாட்டில் பரவாமல் தடுக்க இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 24 தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த உத்தரவு மக்களை கொரோனா எனும் கொடிய கிருமியிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கமாக இருந்தாலும், அன்றாட வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இப்படி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரண நிதியாக 1 கொடியே 25 லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV தினகரன்.

மற்ற கட்சி தலைவர்களை விட அதிகமான தொகையை TTV தினகரன் நிவாரண உதவியாக அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களும், இந்த ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதித்த பொதுமக்களுக்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் PPS சாமிநாதன் பரமத்தி வேலூர் தொகுதிக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் குடும்பத்திற்கு தலா பத்து கிலோ அரிசி வழங்கியுள்ளார்.

கொரோனாவை தடுக்கும் முயற்சியாக, அமமுக
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் ஐயப்பன் பரமசிவம், அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் குமார், பாளை பகுதி கழக செயலாளர் ரமேஷ் ஆகியோர் அவரர் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர், உணவு ஆகியவற்றை வழங்கினார்கள்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், காங்கேயம் நகர கழக செயலாளரும், 2019 ஈரோடு நாடளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளருமான கே.சி.செந்தில் குமார் காங்கேயம் காவல் நிலையம், நகராட்சி அலுவலகம், மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அரசு அலுவலர்கள், காவலர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்காக 2000 முகக்கவசங்கள் காங்கேயம் நகர அமமுக கழகம் சார்பாக இலவசமாக வழங்கினார்.

அமமுக மகளிர் அணியினரும் பொதுமக்களுக்கு தேவையான தங்களின் பங்களிப்பை வழங்கினார்கள்.

Women cadres of AMMK party helping people during corona lockdown

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு ஆவடியில் வேலையின்றி தவிக்கும் வடமாநில கூலித் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகளை அமமுக பேச்சாளர் ஆவடி நூர்ஜஹான் விளங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி வரலட்சுமி, அடம் பயன்படுத்த வரும் மக்களுக்கு சேனிடைசர் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

AMMK members helping by providing foods during corona lockdown

இதே போல சென்னையில் இளைஞர் பாசறை நிர்வாகிகள் போருர் ஏழுமலை, கார்த்திக், வினோ விஜய், அரவிந்த் மற்றும் சதிஷ், சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு, வாயில்லா ஜீவன்களுக்கும் உணவுகளை வழங்கி சேவை செய்து வருகின்றனர்.

AMMK members helping kid during corona lockdown

அமமுக தொண்டர்கள் சாலை ஓரம் வசிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி கொண்டிருந்த சமயத்தில் ஒரு பிஞ்சு சிறுவன் உணவிற்காக நின்ற புகைப்படம் கல் மனதையும் கரைக்கும் வகையில் இருந்தது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அமமுக, நகர கழக செயலாளர் தென்னரசு சாம்ராஜ் தனது சொந்த வீட்டை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் Dr.திலீபன் அவர்களிடம் வழங்கி இருக்கிறார்.

ஜோலார்பேட்டை அமமுக, நகர கழக செயலாளர் தென்னரசு சாம்ராஜ் கொரோனா சிகிச்சைக்காக வழங்கிய வீட்டின் முகப்பு

அதுபோல மாநில அம்மா பேரவை துணை செயலாளர் P ஜோதி முருகன், திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கு சொந்தமாக செயல்படும் 3 கல்வி நிறுவனங்களை கொரோனா சிகிச்சைகாகவும், தனிமைப்படுத்தும் மையமாக அரசு பயன்படுத்தி கொள்ள அறிவித்துள்ளார்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் – முகிலனின் மனைவி பேட்டி

admin

ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி

admin

ஸ்டாலினுடன் பாரிவேந்தர் சந்திப்பு

admin

Leave a Comment