• Home
  • செய்திகள்
  • கொரோனாவில் இருந்து தப்பிக்க பீகார் வில்லேஜ் விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு
அறிவியல் இந்தியா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க பீகார் வில்லேஜ் விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸில் இருந்து தப்ப பீகார் மாநில இளைஞர் புதிய குடை கண்டுபிடித்துள்ளார். அந்த குடை  தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(CSIR) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.

உலகயே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்த தப்ப, முதன்முறையாக இந்தியாவில் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 14 வரை நீட்டித்து வந்தாலும், அந்நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

அவ்வாறு செல்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் பீகாரில் கொரோனா பாதுக்காப்பு  குடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தின் பர்தவுலியின் தேவ்ஹரா எனும் கிராமத்தின் வினித் குமார் தயாரித்துள்ளார்.

சாதாரணமாக மழைக்கும் பிடிக்கும் குடையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு அந்த குடையை உருவாக்கி உள்ளார் வினித். இதன் பொத்தானை அமுக்கியவுடன் குடை விரிந்து திறக்கும்,

இத்துடன் குடையை சுற்றிலும் கால்வரை தொங்கியபடி பிளாஸ்டிக் காகிதமும் விரிந்தது விடும். இது வெளியில் இருந்து வரும் தூசிகளையோ, மற்றவர்கள் தும்மினாலோ நம் மீது படாதவாறு பாதுகாக்கும். அதேசமயம் குடையின் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுவிடும்.

Bihar youngster’s modified Umbrella to prevent from Corona

மீண்டும் மருந்து தேவைப்படும் நிலையில் மற்றொரு முறை அதன் பொத்தானை அமுக்கி பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வினித் குமார் கூறும்போது, ‘இக்குடையை CSIR  நிறுவனத்தின் தலைமையகத்தின் அங்கீகாரத்திற்கு டெல்லி அனுப்பியுள்ளேன். இந்த தகவலை விவரித்து அந்நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சலும் எழுதியுள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.

இதன் விலையை ரூ.300 என நிர்ணயித்துள்ள வினித் குமார், அவரது பகுதியில் இளம் விஞ்ஞானி என்றழைக்கப்படுகிறார். இதற்கு முன் பிளாஸ்டிக்கில் வினித் பெட்ரோல் தயாரித்து அதுவும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்.

கேட்பதற்கும், பார்ப்பதற்கும் சற்று நகைச்சுவையாக இருந்தாலும் முகத்தை மட்டும் மாஸ்க் போட்டு மறைப்பதுடன், இந்த குடையை பயன்படுத்தி உடல் முழுவதையும் மறைத்துக்கொள்ளலாம். 

Leave a Comment