• Home
  • செய்திகள்
  • அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்: தப்லிகி ஜமாத் தலைவர் வேண்டுகோள்
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்: தப்லிகி ஜமாத் தலைவர் வேண்டுகோள்

டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், பரிசோதனைக்கு தாங்களே முன்வரவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் ஆடியோ மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

டில்லியில் நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் தப்லிகி ஜமாத் சார்பில் நடந்த மாதவழிபாட்டு மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் கொரோனா நோயாளிகளான தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களாவர்.  

இதனால், மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் மீது வழக்குப்பதிவு செய்ய டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மார்ச் 28ம் தேதி முதல் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் தலைமறைவானார். போலீசார் அவரை டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மவுலானா புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த ஆடியோவில் மவுலானா கூறியதாவது: “டாக்டர்கள் அறிவுறுத்தியபடி நான் டில்லியில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன். ஜமாத்தை சேர்ந்த அனைவரும் நாட்டில் எங்கிருந்தாலும் சட்டத்தின் உத்தரவுகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள்ளேயே இருங்கள், அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றுங்கள். எங்கும் கூடியிருக்க வேண்டாம். தொற்றுநோய், மனிதனின் பாவங்களால் ஏற்பட்டுள்ளது”. இவ்வாறு அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

Related posts

மே மாதம் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் : ஜோதிட சிறுவன் கணிப்பு

Admin

கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து சூடான சமோசா கேட்ட வாலிபர்

Admin

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

Admin

Leave a Comment