• Home
  • அரசியல்
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் மக்கள் போராட்டம் : போலீஸ் நடத்திய தடியடியில் முதியவர் பலி
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னையில் மக்கள் போராட்டம் : போலீஸ் நடத்திய தடியடியில் முதியவர் பலி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக மக்கள் கூடியதைத் தடுக்க போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு முதல் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். மேலும், போராட்டம் தொடா்பாக 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போலீஸாரின் தாக்குதல் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முதல் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காவல் துறையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

திருச்சி: சென்னையில் குடியுரிமைத் திருத்தச்  சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து திருச்சி பாலக்கரையில் தவ்ஹீத் ஜமாத்தினர் 1000 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: அராஜகத்தில் ஈடுபட்ட காவல் துறையைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு மாவட்டம் சார்பில் தஞ்சாவூர் ஆற்று பாலம் பள்ளிவாசல் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு: ஈரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுளனர். 

நாகை: நாகையை அடுத்த நாகூரில் இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த 200-க்கும் அதிகமானோா் நாகூா் பேருந்து நிலையம் எதிரே நாகை – காரைக்கால் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

விழுப்புரம்: விழுப்புரம், நான்குமுனை சந்திப்பு, கோட்டக்குப்பம் பகுதிகளில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கம் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் TTV.தினகரன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment