• Home
  • அரசியல்
  • கிருஷ்ணகிரியில் குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் : ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் : ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

கிருஷ்ணகிரி அருகே குடி தண்ணீர் கேட்டு 18 கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் வழங்க கூட நடவடிக்கை எடுக்காததால் ஆளுங்கட்சியை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் ஒன்றியம் எருமாம்பட்டி ஊராட்சியில் கூரம்பட்டி, பட்டனூர், பொன்னுநகர், மாங்குடி நகர் உள்ளிட்ட 18 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும் கூரம்பட்டி ஏரியும், பட்டனூர் ஏரியும் தண்னீர் இன்றி வறண்ட நிலையில் இருப்பதால் 18 கிராம மக்களும் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளும் தண்ணீர் இன்றி தவித்து வருவதால், தென்பெண்ணை ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர், குடி தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குடிநீர் வழங்கக் கூட நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்களை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Leave a Comment