• Home
  • இந்தியா
  • ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க முடிவு – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
இந்தியா செய்திகள்

ராணுவத்திற்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க முடிவு – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்‍கையாக, ராணுவத்திற்கு, 10 லட்சம் கையெறி குண்டுகளை வாங்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வகைப் பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், ராணுவத்திற்கு, இந்தியாவிலேயே தயாரிக்‍கப்பட்ட கையெறி குண்டுகளை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டு, ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கையெறி குண்டுகள், தற்போது ராணுவத்தின் வசம் உள்ள பழைய குண்டுகளுக்‍கு மாற்றாக இருக்‍கும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Leave a Comment