தொழில்நுட்பம்

தினமும் 2 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் ஜியோ சலுகை

ரிலையன்ஸ் ஜியோ தனது இரண்டாம் ஆண்டு விழா துவங்கியது முதல், ஜியோ செலபிரேஷன் பேக் என்ற பெயரில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கி வருகிறது. அவ்வப்போது அறிவிக்கப்பட்டும் இச்சலுகை பயனர்களுக்கு அதிவேக 4ஜி டேட்டாவினை நான்கு நாட்களுக்கு வழங்குகிறது.
அந்த வகையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் இச்சலுகையை தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜியோ செலபிரேஷன் பேக் மார்ச் 17 ஆம் தேதி வரை வேலிடிட்டி கொண்டிருப்பதாக தெரிகிறது.
நான்கு நாட்களுக்கு இலவச டேட்டா வழங்கும் இச்சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 8 ஜி.பி. டேட்டா கிடைக்கும். ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச சலுகை வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் பகுதியில் பார்க்க முடியும்.

ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் ஆக்டிவேட் ஆகியிருந்தால், ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் 2 ஜி.பி. டேட்டா மற்றும் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்னதாக ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் சலுகை இதேபோன்றே வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் முன்னணி இடத்தை பிடிக்க ஜியோ தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகளவு வாடிக்கையாளர்களுடன் 2019 ஆம் ஆண்டு ஜியோ அதிகளவு வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு களமிறங்கிய ஜியோ அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் குறைந்த விலை சலுகைகளை வழங்கி பிரபலமாகி இருக்கிறது.


Related posts

மிக வேகமாக வளர்ந்து வரும் TikTok!

admin

பப்ஜி விளையாடியோர் கைது செய்யப்பட்ட விவகாரம் – களத்தில் குதித்த டென்சென்ட் இந்தியா

admin

கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஏன் கூடாது?

admin

Leave a Comment