• Home
  • விளையாட்டு
  • கிரிக்‍கெட் வீரர் ஸ்ரீசாந்த், போட்டிகளில் பங்கேற்க விதிக்‍கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்‍கம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
விளையாட்டு

கிரிக்‍கெட் வீரர் ஸ்ரீசாந்த், போட்டிகளில் பங்கேற்க விதிக்‍கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்‍கம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கிரிக்‍கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்‍கு, போட்டிகளில் பங்கேற்பதற்காக விதிக்‍கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை நீக்‍கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ ஆயுட்கால தடை விதித்தது. சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த்தை, டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தன் மீதான ஆயுட்கால தடையை நீக்கக்கோரி ஸ்ரீசாந்த் முறையிட்டபோது, இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீதான தடையை நீக்கி தனி நீதிபதி 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்‍கப்பட்டதால் ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீட்டித்து வந்தது.

இந்நிலையில், ஆயுட்கால தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்‍கி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Leave a Comment