• Home
  • அரசியல்
  • “சிறையில் எனக்கு உணவு ஊட்டிவிடக்கூட மற்றவர் உதவியை எதிர்பார்த்திருந்தேன்” | தலித் மக்களுக்காக போராடிய ஸ்டேன் ஸ்வாமியின் இறுதி நாட்கள்
அரசியல் இந்தியா செய்திகள் திருச்சி

“சிறையில் எனக்கு உணவு ஊட்டிவிடக்கூட மற்றவர் உதவியை எதிர்பார்த்திருந்தேன்” | தலித் மக்களுக்காக போராடிய ஸ்டேன் ஸ்வாமியின் இறுதி நாட்கள்

Stan Swamy

பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடிய திருச்சியை சேர்ந்த 84 வயதான பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக்குறைவால் மும்பை சிறையில் இன்று காலமானார். who is stan swamy

எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த 2020 அக்டோபர் 9ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரிகளால் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார், ஸ்டேன் ஸ்வாமி. Stan swamy died

இவரின் மரணம் குறித்து ஹோலி பேமிலி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர், டாக்டர் அயன் டிசோஸா அளித்த அறிக்கையில்,”ஸ்டேன் ஸ்வாமி அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், அதனால் அவரது நுரைஈரல் பாதிக்கப்பட்டு நேற்று (4 ஜூலை) அதிகாலை 4:30 மணியளவில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அப்பொழுது சுயநினைவை இழந்தவர், அப்படியே மரணமடைந்தார்” என்று தெரிவித்துள்ளார். Stan swamy caste

ஸ்டேன் ஸ்வாமி கடந்த மே 21 அன்று நீதிமன்றத்திற்கு அளித்த கோரிக்கையில்,”தான் உணவு உண்பதற்கே சிரமப்படுவதாகவும், மும்பை தாலொஜியா சிறையில் தான் நடப்பதற்கும், எழுதுவதற்கும் மிக சிரமப்படுவதாகவும், தன உணவை கூட மற்ற கைதிகள் ஊட்டி விட்டால் தன உண்ண கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும் இந்த சூழ்நிலையில் நீதிமன்றம் தனக்கு பெயில் மட்டும் தந்தால் போதும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார் 84 வயதான ஸ்டேன் ஸ்வாமி.

மருத்துவமனையில் சிகிச்சை பெரும்பொழுது எடுக்கப்பட்ட படத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை உடைக்க போராடிய ஸ்டேன் ஸ்வாமியின் சங்கிலி பூட்டப்பட்ட கால்களை பார்க்கும் பொழுது காலனும் கண் கலங்கி தான் போயிருப்பான்.

Leave a Comment