• Home
  • இந்தியா
  • தாவூத், சையது சலாவுதீன் ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்
இந்தியா செய்திகள்

தாவூத், சையது சலாவுதீன் ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

பாகிஸ்தானில் தங்கியுள்ள தேடப்படும் இந்தியர்களான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தாவூத் இப்ராகீம், சையது அலாவுதீன் ஆகிய இருவரும் தேடப்படுபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள் என்று கூறியுள்ள இந்தியா, தாவூத் இப்ராகிம் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்றும் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை பொறுத்தவரை, பாகிஸ்தான் குறைபாடுள்ள வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்தியா, ஆரோக்கியமான உறவு தொடர வேண்டும் என்ற பொறுப்புணர்வை நிரூபிக்க பாகிஸ்தான் அந்நாட்டில் தங்கியுள்ள தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்தால் இந்த நபர்களை விரைவாக ஒப்படைக்க வேண்டும்.எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Leave a Comment