• Home
  • செய்திகள்
  • கண்டெய்னரில் பிடிபட்ட நகைகள் அனைத்தும் கவரிங் – தேர்தல் பறக்கும் படையினர் தகவல்
செய்திகள் தமிழ்நாடு

கண்டெய்னரில் பிடிபட்ட நகைகள் அனைத்தும் கவரிங் – தேர்தல் பறக்கும் படையினர் தகவல்

மதுரை அருகே வாகன சோதனையின்போது, கண்டெய்னரில் பிடிபட்ட நகைகள் அனைத்தும் கவரிங் என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜன் உத்தரவின் பேரில் 70-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மேலூர் அருகே சித்தம்பட்டி சுங்கச்சாவடியில் வாகன சோதனையின்போது, கண்டெய்னர் லாரியில் எடுத்து செல்லப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

6 பெட்டிகளில் இருந்த நகைகள் தங்கமா? அல்லது கவரிங்கா? என தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். முடிவில் கண்டெய்னர் லாரியில் இருந்த நகைகள் அனைத்தும் கவரிங் என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் உரிய ஆவணங்களை காண்பித்த பின்னர்தான், நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் அதிகாரி நடராஜன் தெரிவித்தார்.

Leave a Comment