அரசியல் இந்தியா

‘இட்லி’ என்னும் வாக்காளர்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிலரின் பெயர்கள் ‘பாகுபலி’, ‘ஆப்பிள்’, ‘இட்லி’, ‘செக்ஸ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. இதுபோன்ற வித்தியாசமான பெயர்களில் 37 வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் சிலவற்றை தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கிவிட்டது.
இதுகுறித்து தெலுங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறும்போது, “எழுத்துப்பிழை மற்றும் ஊழியர் களின் கவனக்குறைவு காரணமாக இந்தத் தவறு நேர்ந் திருக்கலாம். இதில் 18 பேரின் பெயர்களை நீக்கியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

Leave a Comment