• Home
  • செய்திகள்
  • இதுவரை இன்று – 8 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இதுவரை இன்று – 8 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது மாநில அரசின் அதிகாரத்திற்கு மீறிய செயல் – மத்திய அரசு. Trending News Today

2022 முதல் தமிழக அரசின் பள்ளி பாடப் புத்தகத்தில் மத்திய அரசுக்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என்றே இடம்பெறும் – தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை IPS தேர்வு.

தரவு மற்றும் தனிநபர் உரிமை மீறியதாக ட்ரூ காலர் மீது வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு. Trending News Today

தமிழகத்தில் மேலும் 3,211 பேருக்கு கொரோனா தொற்று : தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 57 பேர் உயிரிழப்பு.

கொரோனா முழுமையாக குறைந்த பின்புதான், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும் –அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்த மகேந்திரன் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்து இருந்தால் கோவையில் திமுக வெற்றி பெற்றிருக்கும் – முதல்வர் முக.ஸ்டாலின்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா திமுகவில் இணைந்தார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

பாஜக பற்றி நான் தெரிவித்த கருத்து என்னுடைய சொந்த கருத்து, இதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை – முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 13. தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்.

மத்திய அரசு மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது.இயக்குநர் நினைக்கும் படைப்புகளை
எடுக்க முடியாது.கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தாக இருக்கும் – ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கு : எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

Related posts

தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஆக்சிஜன் வழங்கியது ஏன்?; ராதாகிருஷ்ணன் பதில்

Admin

2021 Tamilnadu +12 State Board Result.. இன்று காலை 11:00 மணிக்கு வெளியீடு.. தெரிந்துகொள்வது எப்படி?

Admin

இதுவரை இன்று – 16 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

Leave a Comment