• Home
  • செய்திகள்
  • போலி இ-பாஸ் மூலம் கோவை வந்த 30 பேர்; ஆம்னி பஸ் பறிமுதல் | EPass
கோயம்புத்தூர் செய்திகள் தமிழ்நாடு

போலி இ-பாஸ் மூலம் கோவை வந்த 30 பேர்; ஆம்னி பஸ் பறிமுதல் | EPass

கோவை: போலி இ பாஸ் ( Epass ) மூலம் பல மாநிலங்களில் கடந்த ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் வந்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பலவித தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் கருமத்தம்பட்டியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை சாவடி அமைத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தானில் இருந்து ஆம்னி பஸ் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 30 பேரிடம் இருந்த இ-பாஸை வாங்கி சோதனை செய்தனர். அதில், அனைத்தும் போலி என தெரிந்தது.

இதனையடுத்து, அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் பஸ்சை பறிமுதல் செய்தனர்.மேலும் போலி இ-பாஸ் மூலம் பல மாநிலங்களை கடந்து எப்படி அவர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விளக்கேற்றிய சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல பிரபலங்கள்

Admin

மே மாதம் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் : ஜோதிட சிறுவன் கணிப்பு

Admin

திருப்பூர் வாசிகள் இனி வீட்டில் இருந்தபடியே இ-பாஸ் வாங்கலாம்

Admin

Leave a Comment