தமிழ்நாட்டில் பெண்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் நீண்டகால நிதி பாதுகாப்பு, குறைந்த ஆபத்து மற்றும் உயர் லாபம் கிடைக்கும் வகையில் திட்டமிட்டு முதலீடு செய்யலாம்
1. பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டங்கள்:
1.1 சுகன்யா சம்ருத்தி திட்டம் (Sukanya Sam Riddhi Yojana):
- இந்த திட்டம் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டது.
- குறைந்தபட்ச முதலீடாக ₹250 முதல் ₹1.5 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு சேமிக்கலாம்.
- இது உயர்ந்த வட்டி விகிதத்துடன் (சுமார் 8.2%), வருமான வரி சட்டம் 80Cன் கீழ் வருமான வரி சலுகைகள் உள்ளன.

2. சிறந்த முதலீட்டு திட்டங்கள்:
2.1 பொது நிதிகள் (Mutual Funds):
- பெண்களுக்கு அதிக லாபம் பெறும் முதலீட்டு திட்டங்களில் ஒன்று Systematic Investment Plan (SIP).
- Systematic Investment Plan (SIP) மூலம் மாதந்தோறும் குறைந்த தொகையிலிருந்து முதலீடு செய்யலாம்.
- குறைந்த risk-கிற்கு Debt Mutual Funds தேர்வு செய்யலாம்.
- அதிக return-காக Equity Mutual Funds தேர்வு செய்யலாம்.
2.2. தங்கம் முதலீடு (Gold Investment) :
- தமிழ்நாட்டில் பெண்கள் பாரம்பரியமாக தங்கத்தை முதலீடாகப் பார்க்கின்றனர்.
- அதிலும் மிக முக்கியமாக தங்க நகைக்கள், தங்க பத்திரங்கள்,கோல்டு ஃபண்டுகள், ETF-கள், டிஜிட்டல் கோல்டு மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர்.
- Gold market-ல்ல விலை அதிகரிக்கும்போது நல்ல லாபம் பெற முடியும்.

2.3.பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) :
Public Provident Fund-ல் குறைந்தபட்ச முதலீடாக ₹500 முதல் அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை ஆண்டுக்கு முதலீடு செய்யலாம்.
- 2025 ஆம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது, ஆண்டுதோறும் கூட்டுத்தொகையாக வழங்கப்படுகிறது.
- மேலும் வருமான வரி 80Cன் கீழ் வரி சலுகைகளும் உள்ளது.
3.பெண்களுக்கான சிறப்பு கடன் திட்டங்கள்:
மகிளா உத்யம் நிதி (Mahila Udyam Nidhi) :
- மகிளா உத்யம் நிதி யோஜனா, பெண் தொழில்முனைவோருக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது.
- புதிய தொழில்கள் தொடங்க விரும்பும் பெண்களுக்கு, உற்பத்தி, உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தொழில்களுக்கு, இந்த அரசு திட்டம் கடன் வழங்குகிறது.
- மேலும் இது 10 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கொண்டுள்ளது.

4. சுய உதவிக்குழுக்கள் (Self-Help Groups – SHGs) மற்றும் பெண்கள் தொழில் வளர்ச்சி :
- தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுக்கள் (SHGs) மூலம் சிறிய அளவிலான தொழில்கள் தொடங்கலாம்.
- சுய உதவிக்குழுக்கள் மூலம் அரசு மானியங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் தொழில்முனைவோருக்கான கடன் கிடைக்கும்.
- உதாரணமாக, பெண்கள் சிறிய அளவிலான உணவுப் பொருள் தயாரிப்பு, கைத்தறி, கிராமப்புற தொழில் முயற்சிகள் போன்றவை செய்யலாம்.

தமிழ்நாட்டில் பெண்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டில் நிதி சுதந்திரத்தை அடையலாம். SSY, SIP, PPF, Mutual Funds, Gold Investment, SHGs போன்றவை சிறந்த முதலீட்டு வழிகள். நீண்டகால லாபத்திற்காக சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து, சரியாக முதலீடு செய்வது பெண்களின் எதிர்கால நிதி நிலையை வலுவாக்கும். மேலும் விபரங்களுக்கு