• Home
  • சினிமா
  • அள்ளி கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் : ஒரு கோடிக்கு மேல் கொரோனா நிவாரண நிதியுதவி
இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

அள்ளி கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் : ஒரு கோடிக்கு மேல் கொரோனா நிவாரண நிதியுதவி

Thala Ajith Kumar donation for Corona

கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காக தல அஜித் ஒரு கொடியே 27 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாயை (Rs.1,27,50,000) நன்கொடை வழங்கி உள்ளார்.

தமிழ் திரையுலக நடிகர்களில் தற்பொழுது வரை நடிகர் அஜித் தான் அதிக தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் நிவாரண நிதி – ரூ.50 லட்சம்

பிரதமர் நிவாரண நிதி – ரூ.50 லட்சம்

FEFSI தொழிலாளர்களின் நிவாரண நிதி – ரூ.25 லட்சம்

PRO யூனியனுக்கான நிதி – ரூ.2.5 லட்சம்

தல ரசிகர்கள் அவரின் உதவியை பாராட்டி ட்விட்டரில் #PerfectCitizenThalaAJITH  என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும், ஆளில்லா விமானங்களை ஆய்வு செய்யும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட குழு ‘தக்‌ஷா‘. இந்த குழுவிற்கு தலைமை ஆலோசகராக செயல்படுபவர் தல அஜித். அந்த குழு உருவாக்கிய ஆளில்லா குட்டி  விமானம், சென்னையின் உட்பட பல மாவட்டங்களில் முக்கிய இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழக அரசால் கால்நடைகள் போல் நடத்தப்படும் துப்புரவு பணியாளர்கள்

Admin

சென்னை, செங்கல்பட்டு, கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு

Admin

தளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்

Admin

Leave a Comment