• Home
  • செய்திகள்
  • சென்னை, செங்கல்பட்டு, கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு
கோயம்புத்தூர் செய்திகள் தமிழ்நாடு

சென்னை, செங்கல்பட்டு, கோவையில் முழு பொதுமுடக்கம் அமலாக வாய்ப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு 15% மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

 இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இருப்பினும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகே 15 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் சங்கிலியை தடுக்க அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டும் என ஆய்வுகள் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்த பகுதிகளில் முழுவதும் அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

Related posts

ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கண்பார்வை | கண்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகள் எது?

Admin

பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

Admin

இதுவரை இன்று – 14 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

Leave a Comment