• Home
  • இந்தியா
  • கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து சூடான சமோசா கேட்ட வாலிபர்
இந்தியா செய்திகள்

கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து சூடான சமோசா கேட்ட வாலிபர்

கொரோனா அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு வினோத தண்டனை அளித்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

உ.பி.,யின் ராம்பூர் மாவட்ட அவசர உதவி எண்ணுக்கு இளைஞர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னுடைய வீட்டு முகவரிக்கு சூடான சமோசா வேண்டுமென அவர் கேட்டுள்ளார். தங்களிடம் விளையாடுவதற்க்காக விஷமிகள் சிலர் போன் செய்கின்றனர்  என்று அழைப்பை துண்டித்தனர்.  தொடர்ச்சியாக பலமுறை உதவி எண்ணுக்கு அழைத்து நச்சரித்துள்ளார்.. இதனால் கடுப்பான மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஞ்சநேய குமார் சிங், போனில் தொந்தரவு செய்த ஆசாமிக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.

சூடான சமோசாவுடன் போனில் தொந்தரவு செய்த நபரின் வீட்டிற்கு நேரில் சென்று டெலிவரி செய்த மாஜிஸ்திரேட், உதவி எண்ணுக்கு அழைத்து தொந்தரவு செய்ததற்கு தண்டனையாக , அப்பகுதியில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் நாடு சுகாதார நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், தேவையற்ற முறையில் அழைப்பு விடுப்பதை மற்றவர்கள் தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டுள்ளார்.

டெல்லியில் பசியால் வாடிய இளைஞர்கள் கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து போலீஸ் மூலம் உணவு பெற்ற சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது –  பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

டெல்லி இளைஞர்கள் பசியால் அவசர உதவிக்கு அழைத்ததிற்கும், இவர்கள் விஷம எண்ணத்தோடு அழைத்ததிற்கும் வேறுபாடு உள்ளது. முடிந்த வரை நாம் வீட்டிற்குள் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு உதவியாக இருப்போம்.

Related posts

அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்: தப்லிகி ஜமாத் தலைவர் வேண்டுகோள்

Admin

மே மாதம் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் : ஜோதிட சிறுவன் கணிப்பு

Admin

Toll Gate கட்டணம் வசூலிக்க கூடாது..துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடை – TTV தினகரன் அறிக்கை

Admin

Leave a Comment