• Home
  • செய்திகள்
  • ஜனவரி இறுதியில் முதல் கொரோனா.. ஈஷா மகா சிவராத்திரி விழாவின் விளைவு
இந்தியா கோயம்புத்தூர் செய்திகள் தமிழ்நாடு

ஜனவரி இறுதியில் முதல் கொரோனா.. ஈஷா மகா சிவராத்திரி விழாவின் விளைவு

ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலர் கொரோனா பாதித்த வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற காரணத்தால், அவர்கள் மூலம் கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று மகா சிவராத்திரி விழாவில் பல வெளிநாட்டினர் திரண்ட நிலையில், அதில் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 21ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட மகா சிவராத்திரி விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். ஜனவரி மாத இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், இந்த மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ள விளக்கத்தில்,

உலக சுகாதார நிறுவனம் கோவிட் – 19 வைரஸை ஒரு பெருந்தொற்று என அறிவிப்பதற்கு முன்பாகவும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு முன்பாகவே வெளிநாட்டினர் ஈஷாவுக்கு வந்துவிட்டதாகவும், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட கோவிட் -19 வைரஸ் தாக்கிய நாடுகளை சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் அந்த மையம் தெரிவித்திருக்கிறது.

ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள் கட்டாயம் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தங்கி இருப்பவர்களும் தன்னார்வலர்களும் சாதாரண நாட்களில்கூட கடுமையான மருத்துவ, சுகாதார நெறிமுறைகள் பின்பற்றி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் சென்னையில் அம்மா உணவகங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஈஷா மைய விழாவில் பங்கேற்றவர்களுக்கு நோய் தொற்று குறித்த சோதனைகள் செய்யப்படுமா என்று கேள்வியெழுப்பப்பட்டபோது, நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Related posts

பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

Admin

கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து சூடான சமோசா கேட்ட வாலிபர்

Admin

Toll Gate கட்டணம் வசூலிக்க கூடாது..துப்புரவு பணியாளர்களுக்கு கவச உடை – TTV தினகரன் அறிக்கை

Admin

Leave a Comment