• Home
  • அரசியல்
  • சசிகலா நிகழ்ச்சிகளில், அமமுக ஏன் பங்குபெறக்கூடாது? – டிடிவி.தினகரன் பளீச்..
அரசியல் இந்தியா தமிழ்நாடு

சசிகலா நிகழ்ச்சிகளில், அமமுக ஏன் பங்குபெறக்கூடாது? – டிடிவி.தினகரன் பளீச்..

Sasikala ADMK

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார், அதன் விபரம் வருமாறு…

அதிமுக பொதுச்செயலாளர் என்கிற தனது உரிமையை சசிகலா கோரி வருகிறார். பன்னீர்செல்வம், பழனிச்சாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி, அவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நேரத்தில் அமமுக நிர்வாகிகள், சசிகலா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், இது வழக்கினை பாதிக்கும். இன்னொரு கட்சிக்கு ஆதரவாக சசிகலா செயல்படுகிறார் என எதிர்தரப்பினர் கோர்ட்டில் சொல்ல வாய்ப்பு இருப்பதால் தான், அமமுக நிர்வாகிகள் கலந்து கொள்வது சட்டப்படி சரியாக இருக்காது.

ஒரு சில நிர்வாகிகள் ஆர்வக்கோளாறில் சசிகலா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, அவரின் சட்டப் போராட்டத்தை பாதிக்கும் என்பதால், தலைமைக் கழக நிர்வாகிகளின் வழிக்காட்டுதலின் பேரில் நிர்வாகிகளும், தொண்டர்களும் செயல் பட வேண்டும்”

என டிடிவி. தினகரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிடிவி.தினகரன் அளித்த பேட்டியின் முழு காணொளி

Related posts

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு

Admin

சைபர் வார்! அமமுக IT Wing-கை சமாளிக்க முடியாமல் திணறும் அதிமுக

Admin

சசிகலா தலைமையில் அதிமுக : பாஜக வகுக்கும் வியூகம்

Admin

Leave a Comment