• Home
  • செய்திகள்
  • மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி TTV தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்!
அரசியல் இந்தியா செய்திகள் தஞ்சாவூர் தமிழ்நாடு

மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி TTV தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்!

மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய – மாநில அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் TTV தினகரன் தலைமையில் நடைபெறும் என அமமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் “தமிழ்நாட்டின்‌ ஜீவாதாரமாக விளங்கும்‌ காவிரி நதி நீரில்‌ நமக்குரிய பங்கினைத்‌ தராமல்‌ பல்வேறு காலக்கட்டங்களில்‌ கர்நாடகா வஞ்சித்து வருகிறது. அதிலும்‌ தீய சக்தியான தி.மு.க எப்போதெல்லாம்‌ தமிழகத்தில்‌ ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம்‌ காவிரியிலும்‌ அதன்‌ துணை ஆறுகளிலும்‌ புதிய அணைகள்‌ கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும்‌ கர்நாடகா, இப்போதும்‌ மேகேதாட்டுவில்‌ அணை கட்டியே தீருவோம்‌
என்று அடம்பிடிக்கிறது.

இதனைக்‌ கண்டித்தும்‌, மேகேதாட்டு அணையைத்‌ தடுத்து நிறுத்த
மத்திய – மாநில அரசுகள்‌ உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்‌,
காவிரி பிரச்னையில்‌ உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை
நமக்குப்‌ பெற்று தந்த இதயதெய்வம்‌ புரட்சித்தலைவி அம்மா அவர்களின்‌ வழியில்‌ செயல்படும்‌ அம்மா மக்கள்‌ முன்னேற்றக்கழகத்தின்‌ சார்பில்‌ வருகிற ஆகஸ்ட்‌ 6ம்‌ தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணி
அளவில்‌ தஞ்சாவூரில்‌ மாபெரும்‌ ஆர்ப்பாட்டம்‌ நடைபெற உள்ளது. கழக
பொதுச்செயலாளர்‌ திரு.டிடிவி தினகரன்‌ அவர்கள்‌ இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்கவிருக்கிறார்கள்‌.

தமிழ்நாட்டின்‌ உரிமையைக்‌ காத்திட நடைபெறும்‌
இப்போராட்டத்தில்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச்‌ சரியாக
கடைபிடித்து மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்‌, வார்டு, வட்ட கழக
நிர்வாகிகள்‌ மற்றும்‌ சார்பு அணிகளின்‌ நிர்வாகிகள்‌, பொதுமக்கள்‌
அனைவரும்‌ பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென
கேட்டுக்கொள்கிறோம்‌.” என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Related posts

இதுவரை இன்று – 16 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

எவ்வளவு இழப்புகள் வந்தாலும் உறுதியோடு தியாகங்களைச் செய்பவர்களுக்கு இறையருள் கிடைக்கும்.. TTV தினகரன் பக்ரீத் வாழ்த்துக்கள்

Admin

மக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்! – TTV தினகரன் வலியுறுத்தல்

Admin

Leave a Comment