• Home
  • சினிமா
  • தளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்
சினிமா செய்திகள் தமிழ்நாடு

தளபதி விஜய் மகன் பற்றி நலம் விசாரித்தார் தல அஜித்

Ajith Vijay

கனடாவில் தங்கி உள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி நலம் விசாரித்தார் நடிகர் அஜித்.

விஜய் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்கி வந்தார். இந்நிலையில் சினிமா தொடர்பான படிப்புக்காக அவர் கனடாவுக்கு சென்றார்.

இதற்கிடையே கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்தார். தினமும் மகனிடம் பேசி அவரைத் தனிமையில் இருக்குமாறும், வெளியே செல்ல வேண்டாம் அறிவுறுத்தி வருகிறார்.

இந்த தகவல் மீடியாவில் பரவியதும் இதுபற்றி அஜித் அறிந்துள்ளார். உடனே விஜய்யிடம் செல்போனில் பேசிய அஜீத், ‘சஞ்சய் எப்படி இருக்கிறான்? இன்று கனடாவில் சூழல் எப்படி இருக்கிறது?’ என்பதாக கேட்டுள்ளார்.

‘சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான். பயப்படும்படியாக எதுவும் இல்லை’ என்று விஜய் கூறினாராம். இது போல் அவ்வப்போது விஜய்க்கு போன் செய்த அஜீத் பேசுவது வழக்கமானது என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Related posts

தல அஜித் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி.. இன்று 6 மணிக்கு ‘வலிமை’ Motion Poster | Valimai

Admin

மக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்! – TTV தினகரன் வலியுறுத்தல்

Admin

நடிகா் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல்

Admin

Leave a Comment