• Home
  • தமிழ்நாடு
  • திருப்பூர் வாசிகள் இனி வீட்டில் இருந்தபடியே இ-பாஸ் வாங்கலாம்
செய்திகள் தமிழ்நாடு திருப்பூர்

திருப்பூர் வாசிகள் இனி வீட்டில் இருந்தபடியே இ-பாஸ் வாங்கலாம்

Corona update with focus tamilnadu

வெளியூர் செல்ல விரும்பும் திருப்பூர் வாசிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் சென்று கூட்டத்தில் சிக்கி சிரமப்படாமல் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

கடந்த மாதம் 24ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை, திருமணம் , இறப்பு போன்ற முக்கிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே சென்று வர அனுமதி கிடைக்கும்.

பொதுமக்கள் பலர் திருப்பூர் கலெக்டர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பல மணி நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர். பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அதிகம் கூடியதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே தமிழக அரசு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாக எளிதாக விண்ணப்பிக்கலாம். வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது-அவசியமான அவசரத் தேவைகளுக்கு மட்டும் ‘இ- பாஸ்’ வாங்கி பயன்படுத்தலாம். Tiruppur.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களது அடிப்படை விவரம்,பயணத்திற்கான காரணம் ,வாகன விவரங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம். வீட்டிலிருந்தபடியே ஐந்து நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த அரை மணி நேரத்துக்குள் உங்கள் ‘இ-மெயில்’ முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, மாறாக நேரில் வந்து யாரும் பயப்படவேண்டாம். கூட்டமாக சேர்ந்து நோயை விலை கொடுத்து வாங்கி விட வேண்டாம் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Related posts

இதுவரை இன்று – 14 July 2021 | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | Trending News Today

Admin

‘சந்தர்ப்பவாதி ஸ்டாலின்’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Admin

தஞ்சாவூர் – கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த இளைஞர் தப்பி ஓட்டம்!

Admin

Leave a Comment