• Home
  • அரசியல்
  • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் – TTV தினகரன் கோரிக்கை
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் – TTV தினகரன் கோரிக்கை

TTV Dhinakaran asks govt to provide special bonus to 108 ambulance workers

மக்களின் உயிரைக் காப்பாற்றும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்

TTV தினகரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று 108 ஆம்புலன்ஸ்  ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரை காப்பாற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தான் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், தற்போது நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மேகேதாட்டு அணை.. கடிதம் மட்டும் அனுப்பினால் போதாது |பழனிசாமி ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க TTV தினகரன் கோரிக்கை

Admin

சுருக்கு மடி வலை.. போராடும் மீனவர்கள்.. தீர்வு காண தமிழக அரசுக்கு TTV தினகரன் கோரிக்கை!

Admin

வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது – TTV தினகரன்

Admin

Leave a Comment