• Home
  • அரசியல்
  • அண்ணா 51வது நினைவு நாள்: TTV தினகரன் தலைமையில் ஏராளமானோர் அணிவகுப்பு
அரசியல் இந்தியா தமிழ்நாடு

அண்ணா 51வது நினைவு நாள்: TTV தினகரன் தலைமையில் ஏராளமானோர் அணிவகுப்பு

பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாளை முன்னிட்டு அமமுக கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் TTV தினகரன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமமுக தொண்டர்கள் சிலரிடம் நமது நிருபர் பேட்டி எடுத்த பொழுது “அண்ணா தொடங்கிய கட்சி(திமுக) மற்றும் அண்ணா பெயரையுடைய கட்சி (அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – அதிமுக), இந்த இரண்டு கட்சிகளும் அண்ணா அவர்களின் கொள்கையை மறந்துவிட்டனர். TTV தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமே அதனை பின்பற்றுவதாகவும், அதனால் தான் இவ்வளவு தொண்டர்கள் பல மாவட்டங்களில் இருந்து பயணித்து வந்ததாகவும்” தெரிவித்தனர்.

அதே சமயம் அமமுக IT விங் பிரிவை சேர்ந்த தொண்டர்கள் #TTVhonoursAnna என்ற hashtag-ஐ Twitter-ல் இந்திய அளவில் Trending செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment