• Home
 • செய்திகள்
 • ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – TTV தினகரன் அறிக்கை
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – TTV தினகரன் அறிக்கை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கை குறித்து அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TTV தினகரன் வெளியிட்ட அறிக்கையின் விவரம் :

 • விவசாயத்திற்கான 16 அம்ச திட்டம்‌ உள்ளிட்ட ஒன்றிரண்டு வரவேற்க்கத்தக்க அறிவிப்புகள்‌ இருந்தாலும்‌, பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்‌, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்‌ போன்றவற்றுக்கு முக்கியத்துவம்‌ அளிக்கப்படாதது, எல்‌.ஐ.சியைத்‌ தனியார்மயமாக்குதல்‌ உள்ளிட்ட மத்திய பட்ஜெட்‌ அறிவிப்புகள்‌ கவலையளிக்கின்றன.
 • விவசாய உயர்வுக்காக தற்போது திட்டமிடும்‌ மத்திய அரசு, அதற்கு நேர்மாறாக தமிழகத்தின்‌ டெல்டா பகுதிகளில்‌ விவசாயத்தை அழிக்கும்‌ மீத்தேன்‌, ஹைட்ரோ கார்பன்‌ போன்ற திட்டங்களைச்‌ செயல்படுத்த நினைப்பது எப்படி சரியானதாக இருக்கும்‌ என்பதையும்‌ யோசிக்க வேண்டும்‌.
 • வருமான வரிவிதிப்பில்‌ விலக்கு பெறுவதற்கு நிதியமைச்சர்‌ அறிவித்திருக்கும்‌ புதிய திட்டம்‌, சேமிப்பை அடிப்படையாகக்‌ கொண்ட இந்திய சமூகத்திற்கு பெரிய அளவிற்கு பலன்‌ தரும்‌ என எதிர்பார்க்க முடியாது. ஏற்கனவே உள்ள விலக்கு மற்றும்‌ கழிவுகளைப்‌ பெறுவதற்கான வாய்ப்புகளோடு புதிய சலுகை இருந்திருந்தால்‌ நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த பயனளித்திருக்கும்.
 • தண்ணீர்ப்‌ பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்குச்‌ சிறப்புத்திட்டம்‌, 100 புதிய விமான நிலையங்கள்‌, நகரங்களில்‌ காற்று மாசை குறைப்பதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை பாராட்டுக்குரியவை.
 • மனிதக்கழிவை மனிதனே அகற்றுவதைத்‌ தடுப்பதற்குப்‌ புதிய தொழில்நுட்பம்‌ செயல்படுத்தப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அறிவியல்‌ உச்சத்திலிருக்கும்‌ 21-ம்‌ நூற்றாண்டிலும்‌ இன்னும்‌ எத்தனை ஆண்டுகளுக்கு இதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கப்போகிறோம்‌ என்று தெரியவில்லை.
 • தமிழர்‌ நாகரீகத்‌ தொன்மையைப்‌ பறைசாற்றும்‌ ஆதிச்சநல்லூரில்‌ அகழாய்வு அருங்காட்சியகம்‌ அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில்‌, கீழடியிலும்‌ அதற்கு முன்பாக கடலடி ஆய்வுகள்‌ நடைபெற்ற பூம்புகாரிலும்‌ அகழாய்வுகளைத்‌ தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம்‌ தருகிறது.
 •   கோடிக்கணக்கான இந்தியர்களின்‌ நம்பிக்கையாக இருக்கிற இந்திய ஆயுள்‌ காப்பீட்டுக்‌ கழகத்தின்‌ (எல்‌.ஐ.சி) பங்குகளைத்‌ தனியாருக்கு விற்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
 •   ரயில்வே தனியார்‌ மயமாக்குவதை விரைவுப்படுத்துதல்‌, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல்‌ தனியார்‌ மருத்துவக்கல்லூரிகளுக்கு சிவப்புக்‌ கம்பளம்‌ விரித்தல்‌ போன்றவை ஏழை-எளிய மக்களுக்கு கவலையை அதிகப்படுத்தியிருக்கின்றன.
 • வரும்‌ ஏப்ரல்‌ முதல்‌ எளிமையான ஜி.எஸ்‌.டி முறை செயல்படுத்தப்படும்‌ என்பது ஆறுதல்‌ தருகிறது. ஆனால்‌, முன்னேற்பாடின்றி கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்‌.டியால்‌ தொழில்‌ துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள்‌ இன்று வரை தொடர்வதைச்‌ சரி செய்ய சிறப்புத்திட்டங்கள்‌ இல்லாதது வருத்தமளிக்கிறது.
 • வேலைவாய்ப்பைப்‌ பெருக்குவதற்கான குறிப்பிடத்தக்க செயல்‌ திட்டங்களோ, அதல பாதாளத்தில்‌ கிடக்கும்‌ இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான உறுதியான அறிவிப்புகளோ இல்லாமல்‌ பளபளக்கும்‌ வார்த்தைகள்‌ நிரம்பிய பிரச்சார உரையைப்‌ போல மத்திய அரசின்‌ பட்ஜெட்‌ அமைந்துவிட்டது ஏமாற்றமளிக்கிறது.

இவ்வாறு TTV தினகரன், மத்திய அரசு பட்ஜெட்டில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் – முகிலனின் மனைவி பேட்டி

admin

ஸ்டாலினுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு : திமுக கூட்டணியை ஆதரிப்பதாக உறுதி

admin

ஸ்டாலினுடன் பாரிவேந்தர் சந்திப்பு

admin

Leave a Comment