• Home
  • தமிழ்நாடு
  • அமைச்சர் K.A.செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதித்தமிழர் பேரவையினர் கைது
அரசியல் தமிழ்நாடு

அமைச்சர் K.A.செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஆதித்தமிழர் பேரவையினர் கைது

கோபி: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசாங்கம் அறிவித்துள்ளது.. இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையின் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆதித்தமிழர் பேரவை அறிவித்திருந்தது.

இதனையடுத்து கோபியில் அமைச்சர் செங்கோட்டையின் வீட்டை சுற்றிலும் போலீஸார் பாதிகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் அக்கட்சியினர் அமைச்சரின் கோபி பேருந்து நிலையத்தில் திரண்டனர். மேலும் முழக்கமிட்டபடி அமைச்சர் வீட்டை நோக்கி புறப்பட முயன்றனர்.

இதனையடுத்து அவர்கள தடுத்து நிறுத்திய போலீஸார் சுமார் 100 பேரை கைது செய்தனர். இதனால் கோபி பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

Related posts

8ம் வகுப்பு மாணவனின் தற்கொலைக்கு பிறகு அரசு எடுத்த முடிவு – 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

Admin

“இங்க வாடா”.. பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

Admin

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment