• Home
  • அரசியல்
  • மசூத் அசாரை சர்வதேச பயங்கரவதியாக அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்!
அரசியல் இந்தியா உலகம் செய்திகள்

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவதியாக அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்!

ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நாவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைக்கும் முயற்சியில் அமெரிக்கா மீண்டும் தீவிரமாகியுள்ளது. 

காஷ்மீரில் 40 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு காரணமான புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவிற்கு எதிராக பல்வேறு சதிச்செயல்களை அரங்கேற்றியது, ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு. அதனை சர்வதேச அளவில் தடை செய்யவும், அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.வால் அறிவிக்க செய்யவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா சமீபத்தில் முயன்றது. ஆனால் அந்த முயற்சியை, சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்ற விடாமல் ஏற்கனவே மூன்று முறை சீனா தடுத்தது. இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தேவையான முயற்சியில் அமெரிக்கா மீண்டும் களம் இறங்கியுள்ளது. 

பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இதற்கான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. 15 நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற 9 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அந்த ஆதரவை பெற்று மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

Leave a Comment