• Home
  • அரசியல்
  • தேர்தல் அறிக்கையில் ஸ்கோர் செய்த T.T.V.தினகரன்…
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

தேர்தல் அறிக்கையில் ஸ்கோர் செய்த T.T.V.தினகரன்…

விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே வெளியிட்டு இருந்தாலும், அது மக்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் நேற்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றியிருக்கும் அம்சங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்…

அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கான இலவச டேப், கல்விக்கடன் தள்ளுபடி, மருத்துவ பரிசோதனை, மாணவிகளுக்கான நாப்கின் வழங்குதல், மாணவர் நல ஆணையம், கல்வி உவித்தொகை போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. அதே போல் விசாயிகளை பாதுகாக்கும் வகையில் கரும்பு, நெல், சிறுதானியங்களுக்கான ஆதார விலையை விவசாயிகளை உறுப்பினராக கொண்ட கமிட்டியே நிர்ணயம் செய்யும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க செய்தல், விவசாய நிலங்கள் ஊடாக எண்ணெய் குழாய்கள் மற்றும் உயர் மின் கோபுரங்ளை பதிக்க அனுமதி மறுப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி என அமமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட பட்டியிருக்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது.

மேலும் இளைஞர் சுயஉதவிக்குழு, தமிழகத்திற்கென தனி செயற்கைகோள், ஒன்றியங்கள் தோறும் அம்மா கிராமப்புற வங்கி என புதிய கோணத்தில் அமமுகவின் தேர்தல் அறிக்கை இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அங்கீகாரம் இல்லாமல், உறுதியான சின்னம் இல்லாமல், தினகரன் எந்த துணிச்சலில் தனித்து நிற்கிறார் என்கிற கேள்விக்கு, அவர் அளித்தியிருக்கும் பதில் தான் இந்த தேர்தல் அறிக்கை என்கிறார்கள் பிரபல அரசியல் விமர்கர்கள்…

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் பொது தேர்தலில், இனி அவர்களின் இடத்தை நிரப்ப போகிறவர்கள் யார் என்கிற கேள்விக்கு விடையளிக்கும் தேர்தலாகவே இந்த நாடாளுமன்ற தேர்தல் அமைய போகிறது. இதில் சரியான திட்டமிடல், துணிச்சலான முடிவுகள், மக்களை கவரும் வசீகரம் என ஜெயலலிதாவின் ஆளுமையை தினகரன் பிரதிபலிப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதைத்தான் இந்த தேர்தல் அறிக்கையும் ஆமோதிக்கிறது என்பதை தான், அந்த அறிக்கை பெற்றியிருக்கும் வரவேற்பு காட்டுகிறது…

Leave a Comment