• Home
  • அரசியல்
  • எடியூரப்பாவுக்கு எதிராக கிளம்பிய ரூ.1800 கோடி ஊழல் பூதம்!
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

எடியூரப்பாவுக்கு எதிராக கிளம்பிய ரூ.1800 கோடி ஊழல் பூதம்!

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான எடியூரப்பா, அந்த கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, கடந்த 2009ம் ஆண்டு, எடியூரப்பா முதல்வராக பதவி வகித்தபோது, பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அவர் பணம் வழங்கியதாக கூறினார். இதுதொடர்பாக, எடியூரப்பா தமது கைப்பட டைரியில் எழுதி வைத்திருந்ததாக குறிப்பிட்ட அவர், இதுகுறித்த ஆவணங்களையும் செய்தியாளர்கள் மத்தியில் காட்டினார். 

மேலும், எடியூரப்பாவும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அனந்தகுமார் ஹெக்டேவும் இது குறித்து தொலைபேசியில் உரையாடியதற்காக ஆதாரம் இருப்பதாகவும் ரன்தீப் சுர்ஜித்வாலா கூறினார். இந்த குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கூறியுள்ள எடியூரப்பா, போலியான ஆவணங்களை காட்டி, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்துள்ளார். 

Leave a Comment