• Home
  • அரசியல்
  • பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அரசியல் இந்தியா உலகம் செய்திகள்

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்லாமாபாத்:

லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 23-ந்தேதி பாகிஸ்தான் தேசியதினம் கொண்டாடப்படுகிறது.

அதைதொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘‘தேசிய தினம் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

துணை கண்டத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை இன்றி ஜனநாயகம், அமைதி மற்றும் செல்வசெழிப்புடன் மக்கள் இணைந்து வாழும் நேரம் இது’’ என தெரிவித்துள்ளார்.

அதற்காக பிரதமர் மோடிக்கும் இம்ரான்கான் நன்றி தெரிவித்தார். அதிலும் ‘‘இந்தியாவுடன் பேச்சு தொடங்க இது ஒரு நல்ல தருணமாக கருதுகிறேன். அதன்மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். இருநாட்டு மக்களுக்கும் இடையே அமைதி, வளமையுடன் கூடிய புதிய உறவு தேவை’’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தேசியதினம் இஸ்லாமாபாத்தில் கொண்டாடப்பட்டது. நேற்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு அனுப்பி இருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தனது பிரதிநிதிகளை அனுப்பவில்லை. அதேபோன்று இன்று இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவிலும் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்கவில்லை.  #PakistanNationalDay #PMModi

Leave a Comment