அரசியல் செய்திகள் தமிழ்நாடு

பாமகவின் பலே திட்டம்….

சில மாதங்களுக்கு முன்புவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த டாக்டர். ராமதாசும், அன்புமணியும், இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை நாம் அறிவோம். ஏன் இந்த திடீர் மாற்றம் என சில முக்கிய பாமக தலைவர்களிடம் காது கொடுத்தால், இதற்கு பின்னால் இருக்கும் ராமதாசின் பலே கணக்கை அவர்கள் சொன்னபோது, நமக்கே ஆச்சர்யமாக இருந்தது…

அவர்கள் சொன்ன அரசியல் கணக்கு இதுதான். வருகின்ற தேர்தலில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி பாமகவுக்கு இருக்கிறது, இல்லையென்றால் அங்கீகாரம் ரத்து ஆகிவிடும். தனித்து நின்றால் வெற்றி சாத்தியமில்லை என்பதால், கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தார்கள். அதிலும் இப்போது அதிமுகவுடன் சேர்ந்தால், தேர்தல் செலவுகளையும் பார்த்துக்கொள்வார்கள், அதே நேரத்தில் வலிமையான தலைமையும் இல்லை என்பதால், அவர்களுடன் கூட்டணி வைத்தால், அதிமுகவையும் சேர்த்தே கட்டுப்படுத்த முடியும் என கணக்கு போட்டுள்ளார்களாம்.

அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், தொகுதிகளை சமமாக பிரித்து தேர்தலில் நின்று ஆட்சியிலும் சமபங்கு கேட்கலாம் என்கிற திட்டமும் ராமதாசிடம் இருக்கிறதாம். சாதி ரீதியாக பழனிசாமியை சரிசெய்து, முதல்வராக்குகிறேன் என சொன்னால் பழனிசாமியை தன் கன்ட்ரோலில் வைத்தியிருக்கலாம். அதோடு மட்டுமில்லாமல் அமைச்சரவையிலும் பாமகவை புகுத்தி விடலாம் என்பது ராமதாசின் திட்டங்களில் ஒன்றாம்…

ஆனால் இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி தான். இப்போதே அதிமுக- பாமக கூட்டணியை பெரும்பான்மையான தொண்டர்கள் விரும்பவில்லை என தகவல்கள் வருகின்றன. ஜெ.வை கடுமையாக விமர்சித்த ராமதாசிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். இப்போது அதிமுகவை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற பாமகவின் திட்டம் அவர்களுக்கு தெரிந்தால், நிச்சயம் அவர்கள் இதை அனுமதிக்கப்பட மாட்டார்கள். கீழ் மட்டத்தில் இது இப்போதே அரசல் பரசலாக புகைய தொடங்கி இருக்கிறதாம். திடீரென ராமதாஸ் ஏன் நம்மிடம் கரிசனம் காட்ட வேண்டும் என்கிற கேள்வியை பலர் கேட்க தொடங்கி விட்டார்கள்.

எனவே பாமகவின் கணக்கு நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. மேலும் இந்த ஆட்சி கவிழ்ந்த அடுத்த நிமிடமே, அதிமுக தினகரன் கைகளுக்கு தான் செல்லும் என்பதால், பாமகவின் கணக்கு நிச்சயம் நடக்காது என்றே தோன்றுகிறது….

Leave a Comment